புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பேருந்து சேவை நிறுத்தம்: அமைச்சர் ஷாஜகான் பேட்டி

24 November 2020, 4:16 pm
Quick Share

புதுச்சேரி: நிகர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், நிவர் புயல் நாளை மதியம் 1.30மணிக்கு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்கள தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
இன்று மாலை முதல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சர் ஷாஜகான், காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 30 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை அவர்களை மீட்க கடலோர காவல் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நிகர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகல் முதல் பேருந்து சேவை முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Views: - 15

0

0