ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்:பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம்…

Author: kavin kumar
26 November 2021, 1:42 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்துறை தனியார்மய மாக்கம் உட்பட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, தலைமைச்செயலர் அஸ்வினிகுமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 50 சத இடங்கள் பெறுதல், தனியார் பல்கலைக்கழகம் அனுமதி, கரசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மாற்றுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

Views: - 215

0

0