போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து கேமரா மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு: திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

12 September 2020, 6:08 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு திருடனை பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர் .

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஹீனைர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து சென்ற நிலையில் வழக்கம் போல் காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் இருசக்கர வாகனம் 20 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது இது குறித்து கடையின் உரிமையாளர் நகர காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், இரவில் தனது இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற பிரசாத் என்பவரை கண்டறிந்து அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். திருடனை பிடித்து தனது கடையின் அருகே கொண்டு வந்தபொழுது அப்பகுதி மக்கள் நீண்ட நாள் அப்பகுதியில் திருடு போவதற்கு இந்த திருடன் தான் காரணம் எனக்கூறி சரியாக தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட காயங்களுடன் திருடனை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான கேமரா, இருசக்கர வாகனம் மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் திருடப்டப்பட்டுள்ள தகவல் தெரிந்து ஓரிரு மணி நேரங்களிலேயே குற்றவாளியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0