அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர் செல்வராசு

Author: Udhayakumar Raman
11 March 2021, 5:47 pm
Quick Share

திருச்சி: முசிறியில் அதிமுக வேட்பாளர் செல்வராசு நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பதவி வகிக்கும் தற்போதைய எம்எல்ஏ செல்வராசுக்கு கட்சி தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து நிர்வாகிகளுடன் முசிறி கைகாட்டியில் அதிமுக வேட்பாளர் செல்வராசு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அண்ணா, எம் ஜி ஆர் , ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கடைகளிலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடமும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Views: - 41

0

0