பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

6 July 2021, 11:38 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடக்கு தாராநல்லுாரை அப்பகுதியை சேர்ந்த சேர்ந்த தேவா(27) என்பவர் அப்பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தேவாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தேவா மீது கோட்டை காவல் நிலையத்தில்
7 வழக்குகளும், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 1 வழக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 17 வழக்கு என அவர் மீது 25வழக்குகள் அவர் மீது உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Views: - 182

0

0