கஞ்சா விற்பனை போட்டியில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை: 2 பேர் காவல் நிலையத்தில் சரண்

Author: Udayaraman
28 July 2021, 8:53 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பனை போட்டியில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை செய்த 2 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்நல்லூர் பகுதியில் முட்புதரில் வாலிபர் சடலம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சோழவரம் போலீசார் அந்த இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா வியாபாரி சண்முகப்பாண்டியன் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அடித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டி காரணமாக மணிகண்டன், வேலு என்கிற முருகன் இருவரும் அவரை வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் சரணடைந்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு ரத்தவெள்ளத்தில் உடல் கிடந்த இடத்தில் நான்கு கத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடி மேலும் சிலரை தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் அவரை கொலை செய்தனரா ?அல்லது வேறு யாருடனும் சேர்ந்து இவரை இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 94

0

0