தஞ்சையில் ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தல்:ஒருவர் கைது

Author: kavin kumar
4 November 2021, 2:59 pm
Quick Share

தஞ்சை: ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மூட்டைகளை தஞ்சை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு நாகையிலிருந்து கஞ்சா கடத்ததுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தஞ்சை நாகை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாகையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி போலிசார் சோதனை செய்தபோது ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலிசார் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நாகையைச் சேர்ப்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மார்சல் டெரன்ஸ் ராஜாவை விசாரணை செய்ததில், போலிசாரிடம் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார். மேலும் ஆந்திராவில் இருந்து நாகை வழியாக படகில் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 கோடி எனவும் போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் போலிசார் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 180

0

0