கார் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி- 6 பேர் படுகாயம்

3 July 2021, 3:33 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கார் மரத்தில் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் வேல்ராம்பட்டு துர்கா காலணியை சேர்ந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் எட்டு பேருடன் காரில் திருநள்ளாறு சென்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளனர். இதில் கார் நிலை தடுமாறி சாலை யோரம் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ராஜேஸ்வரி(30) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரது மகள் கௌசிகா(10) உட்பட 6 பேர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 78

0

0