கார் கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து: அடகு கடை உரிமையாளரின் மனைவி உயிரிழப்பு
12 September 2020, 7:39 pmஅரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே காரும் கேஸ் சிலிண்டர் லாரியும் மோதிய விபத்தில் அடகு கடை உரிமையாளரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து கூவத்தூர் குடிகாடு அருகே காரும் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் மோதிய விபத்தில் கும்பகோணம் பெரிய கடைத்தெருவைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் நரேஷ்குமார் மனைவி மனிஷா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நரேஷ்குமார் மற்றும் ஓட்டுனர் திருமுருகன் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், அடகு கடை உரிமையாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், அதற்க்காக பொருட்கள் வாங்க சென்னைக்கு சென்று திரும்பிய நிலையில் விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் தொட்டியம் முபாரக் லாரி ஓட்டுனரிடம் ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்இறந்துபோன மணிசாவிற்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க சென்னை சென்று திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0