அதிவேகமாக வந்த கார் : புள்ளிமான் பலி! வனத்துறையினர் விதித்த அபராதம்!!

4 September 2020, 7:06 pm
Deer Dead - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் கோத்தகிரி வன சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு சாலை மார்க்கங்கள் உள்ளன. இவ்விரு வன சாலைகளும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடைபெற உள்ளதால் இந்த சாலைகளை கடந்து வன உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும், எனவே இந்த வனச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடனும் குறிப்பிட்ட வேகத்துடன் மட்டுமே இயக்க வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது

இருப்பினும் அதிகப்படியான வேகம் காரணமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் வாகனங்களில் மோதி வன உயிரினங்கள் உயிரிழப்பதும் அவ்வப்போது நடந்துதான் வருகிறது.

இந்த நிலையில் உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்த கார், ஓடந்துறை வனக் குடியிருப்பு அருகில் வந்தபோது, ஒரு புள்ளி மான் கூட்டம் கோத்தகிரி சாலையை கடந்து உள்ளது.

அப்போது அதிவேகமாக வந்த கார் கூட்டத்தில் இருந்த ஒரு புள்ளிமான் மீது மோதி, சம்பவ இடத்திலேயே பெண் புள்ளிமான் பலியானது. இதனை அடுத்து சத்தம் கேட்ட வனத்துறையினர் ஓடந்துறை வனச் சோதனைச்சாவடியில், காரை ஓட்டி வந்த உதகை, பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆன்டனி குரூஸ் (வயது சுமார் 45) என்பவரரை, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்

பின்னர் கோவை மாவட்ட வன அலுவலர் திரு து.வெங்கடேஷ் அவர்களது உத்தரவின் பேரில், வனப்பகுதி வழியான இச்சாலையில் அதி வேகமாகவும், கவனக் குறைவாகவும் வந்து, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, ரூ 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இறந்த புள்ளிமானின் உடலை, கால்நடை உதவி மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

Views: - 0

0

0