அரசு மருத்துவமனையில் இருதயம் சார்ந்த சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது: மருத்துவமனை முதல்வர் வனிதா பேட்டி…

By: Udayaraman
31 July 2021, 1:52 pm
Quick Share

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் அதி நவீன மருத்துவ கருவிகளின் உதவியோடு இருதயம் சார்ந்த சிகிச்சைகள் மிக சிறப்பாக அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார்.

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் இருதய சிகிச்சை பிரிவில் பொதுமக்களுக்கு சேவையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை பேராசிரியர்கள் தங்கு தடையின்றி வழங்கி வருகின்றனர். மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படும்போது இருதயத்தில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்படும், அதுபோன்ற நேரங்களில் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனை நாடும் போது இரண்டு விதமான சிகிச்சை முறைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக புதிதாக இரண்டு நவீன கருவிகளை வாங்கியுள்ளோம்.

இந்த இரண்டு முறையான சிகிச்சையின் வாயிலாக மாரடைப்பு பிரச்சனையால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.இந்த அதி நவீன கருவியின் மூலம் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று வீடு களுக்கு திரும்பியுள்ளனர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் எடுத்துக் கொண்டால் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் செலவாகும், ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் இலவசமாக பொதுமக்களுக்கு இந்த சேவையை செய்து வருகிறோம். இந்த புதிய கருவிகள் மூலம் இருதயத்தில் எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதனை ஆராய்ந்து இரத்த ஓட்டத்தை எப்படி சீர் செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டு சுலபாமாக கையாள முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் இருதய சிகிச்சை துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Views: - 80

0

0