நடிகர் மீது கந்துவட்டி புகார்: பணம் கொடுக்காதவரை தாக்கியதாக நடிகர் உள்பட 3 பேர் மீது வழக்கு

3 September 2020, 4:58 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கந்துவட்டிக்கு பணம் வாங்கி திருப்பி தராத நபரை தாக்கிய நடிகர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், மறைந்த பிரபல நடிகரும், மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் பொன்மலை ரயில்வே பணிமணையில் பணியாற்று ஊழியர்களுக்கு கந்த வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இவர் இறந்த பிறகு இவரது 2வது மருமகனும், அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரும், நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை தேவைக்காக ரூபாய் 35ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

இந்த பணத்திற்கு தொடர்ந்து வட்டி கட்டி வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றின் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வட்டி கட்டவில்லை, இந்நிலையில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த இவரை 3பேர் கொண்ட கும்பல் கடத்தி தென்னூரில் உள்ள அவர்களது அலுவலக பகுதிக்கு கூட்டி சென்றனர். அங்கு அவர் வாங்கிய ரூ35 ஆயிரத்துக்கு வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை உடனே திரும்பி தர கூறி சரமாரியாக மாறி மாறி தாக்கியுள்ளனர். அடியை தாங்க முடியாத ஆறுமுகம் அவர்களிடம் வரும் 20ம் தேதிக்குள் பணத்தை தருவதாக தெரிவிக்கவே, அந்த நபர்கள் அவரை மிரட்டி அனுப்பி வைத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஆறுமுகம் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடிகர் ஜெரால்டு, மரியம்நகர் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ஜெயராஜ், பாலக்கரை பகுதியை சேர்ந்த விசு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெஸ்டின் ஜெரால்டு என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை காவல்துறையின் தேடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனிடம் உரிய நடவடிக்கை எடுக்கவும், தனது உயிரூக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி புகார் கொடுத்தார்.

Views: - 7

0

0