இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: தாளவாடியை சேர்ந்த இளைஞர் கைது…

Author: Udhayakumar Raman
31 August 2021, 6:56 pm
Quick Share

ஈரோடு: மைசூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாளவாடியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி கோவில் அருகே கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த சிலர் அந்தப் பெண்ணை அழைத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் செல்போன் டவர் மூலம் கர்நாடக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி (28) என்பவரை மைசூரிலிருந்து வந்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Views: - 251

0

0