அனைத்து பறையர்களின் அமைப்பின் சார்பில் மாநில எழுச்சி மாநாடு

26 February 2021, 9:32 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற அனைத்து பறையர்களின் அமைப்பின் மாநில எழுச்சிமாநாட்டில் பல்வேறு தீர்மானமனங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து பறையர்களின் அமைப்பின் சார்பில் மாநில எழுச்சி மாநாடு மாநில நிர்வாகி துரைமனோஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கூட்டுறவு சங்கத்தில் சாம்பவர் பறையர்க்கு 50% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், சாம்பவர் பறையர் இன மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து வாழ்விதாரத்தை கொடுத்து உயர்திட வேண்டும்,

தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை அமுல்படுத்த வேண்டும், சாம்பவர், சாம்பவ பறையர்கள், பிரிவில் உள்ள அனைவரையும் சாம்பவவர் குல வேளாளர் என பொதுப்பெயரில் மத்திய மாநில அரசுகள், அரசு பதிவேட்டில் பதிவு செய்து அரசாணை வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் பறையர்கள் அமைப்பின் மாவட்ட மாநாட்டு பொருப்பாளர்கள் தயா, செல்வராணி, ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்

Views: - 15

1

0