ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் கால்நடைகள்… நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
6 August 2020, 5:03 pmதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு பணிகள் காரணமாக மனு அளிக்கவும், நலதிட்டங்களை பெறவும், நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சில சமயங்களில் பொதுமக்களை முட்டித் தள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாடுகள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை. இதனால் இந்த மாடுகளைக் கண்டு ஒருவித கலக்கத்தில் உள்ளனர்.
இந்த மாடுகளைப் பிடிக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும் நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து இந்த மாடுகளைப் பிடித்துச் சென்று, பொதுமக்கள் அச்சமின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்ல வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளையும் உரிய முறையில் பிடித்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.