உதகையில் ஸ்மார்ட் கேர்ள் என்னும் புதிய திட்டம் துவக்கம்

22 January 2021, 2:54 pm
Quick Share

நீலகிரி: மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டங்களை மற்றும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தேசிய பெண்கள் தினமான இன்று உதகையில் ஸ்மார்ட் கேர்ள் என்னும் புதிய திட்டம் துவங்கப்பட்டது.

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோள் வைத்துக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு குறைந்து வரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில், விழிப்புணர்வும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலும் ஏற்படுத்தித் தருவதே முக்கிய நோக்கமாக மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் நமது மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் Smart girl என்கிற திட்டம் இன்றுமுதல் துவங்கப்பட்டுள்ளது இப்பயிற்சி 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நடத்தப்படவுள் ளது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குழந்தைகள் உரிமைகள் பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் இளம் வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது தன்னம்பிக்கை பயிற்சி என அவர்களுக்கு வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்குவோம் என கூறினார். மேலும் சமூகத்தில் பெண்குழந்தைகள் தைரியமாக செயல்பட வேண்டும் தங்களுக்கான இலக்கை நோக்கி பயணிப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமென கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அலுவலர் பிரபு, நாவா அறக்கட்டளை நிர்வாகிகள் , பாரதிய ஜெயின் சங்கத்தனா பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0