பிரபல ரவுடி நிஷாந்த் கொலை வழக்கு: 9 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
15 September 2021, 4:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பிரபல ரவுடி நிஷாந்த் கொலை வழக்கில் 9 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிசாந்த் பிரபல ரவுடி. இவர் மீது காந்தி மார்க்கெட், தில்லை நகர் மற்றும் கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் வாமடம் பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் விஜய் என்பவருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிசாந்த் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிசாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்
கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் அதிகாலை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள கழிவறையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற நிசாந்தை பின்தொடர்ந்து வந்த 5பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் பிரசாந்தை ஒட ஒட வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் கொலை செய்தவர்களை‌ பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் சூர்யா, வெங்கடேஷ் அரவிந்த், ராஜதுரை, விக்னேஷ், குருமூர்த்தி மணிகண்டன், சுரேந்தர் ஸ்டீபன் ஆகியோர் உட்பட 9 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 197

0

0