ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இலவசமாக செல்போன்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்

8 October 2020, 8:34 pm
Quick Share

ஈரோடு: அரசு பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இலவசமாக செல்போன்களை தொண்டு நிறுவனம் வழங்கியது.

ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்பிற்கு இப்பள்ளியில் பயின்று வரும் 15 மாணவ மாணவிகளுக்கு செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,

பள்ளியில் ஆசிரியர்கள் தீவிர முயற்சியில் AJS என்ற டிரஸ்ட் சார்பில் 10 மாணவ மாணவிகளுக்கு இலவச ஆண்ராய்ட் மொபைல் போன்களை வழங்கினர். மாவட்டக் கல்வி அலுவலர் மதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ மாணவியருக்கு இலவச மொபைல் போன்களை வழங்கினர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவ மாணவிகள் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால் ஆன்லைன் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் , தற்போது மொபைல் போன் கிடைத்துள்ளதால் ஆன்லைன் கல்வி கற்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Views: - 32

0

0