தூங்கி கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி 2 பேர் கைது…

Author: kavin kumar
26 October 2021, 6:54 pm
Quick Share

சென்னை: சென்னையில் தூங்கி கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பீர்ஷாப் சந்து பகுதியில் கட்டுமான பணிகள் செய்யும் வீட்டில் வேலை செய்து வருபவர் ரஞ்சித் குமார். இவர் கடந்த 22 ம் தேதி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் தூங்கி எழுந்து பார்த்த போது இவரது செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் செம்பியம் குற்றப் பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கின்ற ஹேமந்த் குமார் மற்றும் கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 166

0

0