பள்ளிக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

26 August 2020, 2:54 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளிக்கு அருகாமையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சிவன் தாங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகாமையில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளது. செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தில் தற்போது குழிதோண்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அருகாமையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

Views: - 25

0

0