சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கபட்ட ஒட்டுனர்

1 December 2020, 8:34 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் அருகே 38 டன் சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒட்டுனர் மீட்கபட்டார் .

அரியலூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து 38 டன் சிமெண்ட் ஏற்றி கொண்டு விழுப்புரம் செல்லவிருந்த பல்கர் லாரி வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே வளையில் திரும்பம்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் லாரியில் சிக்கிகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்ரப்அலி என்ற ஒட்டுனரை மீட்டெடுக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினரும் பொதுமக்களும் ஈடுப்பட்டனர்.

பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பலத்த காயங்களுடன் லாரி ஒட்டுனர் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் அரியலூர்- திருச்சி செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

Views: - 18

0

0