சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

Author: Udhayakumar Raman
25 July 2021, 3:56 pm
Quick Share

தருமபுரி: கடத்தூர் அருகே ஆந்திராவிலிருந்து கோவைக்கு சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து, கோயம்புத்தூருக்கு 30டன் சிமெண்ட் மூட்டைகளை லாரி டிரைவர் ரமேஷ் என்பவர் ஏற்றிக்கொண்டு இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூரிலிருந்து பொம்மிடி செல்லும் சாலையில் திண்டலானூர் அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது லாரி மோதியதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த கடத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்ததில், நல்லம்பள்ளி தொப்பூர் வழியாக செல்ல வேண்டிய லாரியை டொல்கேட்டிற்கு பயந்து கடத்தூர் வழியாக இயக்கியதும், லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தின் காரணமாக லாரி தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரியவந்தது.

Views: - 188

0

0