மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணி

3 March 2021, 4:28 pm
Quick Share

திருச்சி: திருச்சி திருவரம்பூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் சட்டமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்கு அளிக்கும் விதமாக மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.
அப்படி வரும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மத்திய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 96 பேர், இன்ஸ்பெக்டர் ஜிடி சொங்கன்லோகம் தலைமையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட போலீசார் மற்றும் திருச்சி அதிவிரைவு படை போலீசார் என சுமார் 300 போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியை காட்டூர் பாலாஜிநகரில் திருச்சி எஸ்பி ராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவரது தலைமையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டூர் பாலாஜி நகரில் தொடங்கிய பேரணி திருவெறும்பூரில் நிறைவடைந்தது.

Views: - 11

0

0