வாக்குறுதிகளை காப்பாற்றாமல் விதிமுறைகளை மீறும் மத்திய அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு

Author: Udayaraman
13 October 2020, 10:30 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: ஜி.எஸ்.டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை காப்பாற்றாமல் மத்திய அரசு விதிமுறைகளை மீறுவதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் புதுச்சேரி உட்பட 9 மாநிலங்கள் பங்கேற்றது. மாநிலங்களுக்கான இழப்பீட்டை வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் சொல்லாமல் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டத்தை முடித்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடு செய்ய மத்திய அரசே கடன் வாங்கி மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அது பற்றி பதிலும் தெரிவிக்கவில்லை, வாக்கெடுப்புக்கும் விடாமல் ஜி.எஸ்.டி கூட்டம் முடித்து விட்டார்கள்.

இது விதிமுறைகளுக்கு மீறியது இது குறித்து புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்கள் கூடி மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசொய அவர் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கையால் மத்திய அரசின் ஒரு ரேசன் கார்ட் ஒரே நாடு என்ற திட்டத்தை புதுச்சேரியில் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என கேள்வி எழுப்பிய முதல்வர் நாராயணசாமி,

கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தி அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிடுவதாகவும், புதுச்சேரி ராஜ்நிவாஸ் பாஜக கட்சியின் தலைமை அலுவலமாக செயல்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கிரன்பேடி மூலம் செயல்படுத்துவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டினார்.

Views: - 33

0

0