புதுச்சேரியில் குடியரசு தின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

24 January 2021, 2:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 72வது குடியரசு தினத்தையொட்டி போலீசார் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் நாளை மறுநாள் நாட்டின் 72வது குடியரசு தின கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இந்நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் காவல் துறை, ஊர்காவல் படை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை வீரர்களின் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதனை காவல் உயரதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மாணவ – மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை.