ஈரோட்டில் நடைபெற்ற சேர்பூசும் திருவிழா: உடலில் சேறு பூசியும் வேடமிட்டும் திருவிழாவை கொண்டாடிய பக்தர்கள்

3 March 2021, 7:31 pm
Quick Share

ஈரோடு: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சேர்பூசும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசியும் வேடமிட்டும் திருவிழாவை கொண்டாடினர்..

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோவில் 200வருடங்கள் பழமைவாய்ந்த கோவிலாகும்.இந்த கோவில் மாசி மாதம் தோறும் வெகு விமரிசையாக பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதை தொடர்ந்து கொரோனா கட்டுபாடு விதிமுறைகளுடன் இந்த ஆண்டிற்கான பண்டிகை கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் கோவில் பண்டிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்ச்சியான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் சேர்பூசும் விழா நடைபெற்றது. மேட்டூர் சாலையில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து மேட்டூர் சாலை வழியாக செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பவானி சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், காய்கறி வேடம், அம்மன்,சிவன் உள்ளிட்ட வேடம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

ஒருவருக்கு ஒருவர் சேற்றினை பூசி விளையாடினர். இதன் மூலம் உடலில் தோல் நோய் உள்ளிட்ட அனைத்து நோய் பிரச்சினை நீங்கும் என்கிற ஐதீகம் பல வருடங்களாக கடைப்பிடிக்க படுகிறது. இதே போன்று சாமி ஊர்வலத்தில் சிறு குறு தொழில் செய்பவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற காசு, பழங்கள், மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை சூறையிட்டு பிராத்தனை செய்தனர். இந்த நூதனமான திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வெகு விமரிசையாக பண்டிகை கொண்டாடினர். மேலும் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் பவானி நகர பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 10

0

0