உதவி செய்வதாக கூறி ஆசிரியையிடம் செயின் பறிப்பு

2 November 2020, 8:09 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி அருகே பேருந்துக்காக காத்திருந்த ஆசிரியை பள்ளியில் இறக்கி விடுவதாக அழைத்துச் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற நபர் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சுமதி (50) பணியாற்றி வருகிறார். தான் பணிபுரியும் அரசு பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிட பணியை பார்வையிட அருப்புக்கோட்டையில் இருந்து பேருந்து மூலம் பனையூர் சென்று உள்ளார். அங்கு இருந்து செம்பொன் நெருஞ்சிக்கு பேருந்துக்காக காத்திருந்த அவரிடம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஆசிரியை பள்ளியில் இறக்கி விடுவதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார்.

பள்ளிக்கு செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்திய அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி ஆசிரியை அணிந்திருந்த 15 பவுன் மதிப்பு உடைய 3 தங்க செயினை பறிந்து சென்று உள்ளார். குறித்து தலைமை ஆசிரியை திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0