சிசிடிவி உதவியுடன் செயின் பறிப்பு: 4 பேரை கைது செய்த போலீசார்…

20 July 2021, 8:34 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே சிசிடிவி உதவியுடன் செயின் பறிப்பு திருடர்களை 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் நாகமங்கலம் அருகில் உள்ள கவுத்தநாயக்கம்பட்டியை சேர்ந்த அழகிரி என்பவரின் மனைவி சின்னஅக்காள்(80). இவர் தனது ஆடுகளை காட்டுப்பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்த போது 2இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் இவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவன சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சியை சோதனை மேற்கொண்டனர்.

அதில் பதிவான இளைஞர்களின் முகத்தை வைத்து திருச்சி மாவட்டம், கவுத்தநாயக்கம்பட்டியை சேர்ந்த பாஸ்கரை என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்
திருச்சி மாவட்டம், நாகமங்கலம் தென்றல் நகரை சேர்ந்த வீரமணி, பாண்டியன், செங்கல்பட்டு, மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி ஆகியோரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நால்வரும் திருச்சி ஜேஎம்4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மாவட்டம், துறையூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Views: - 83

0

0