தொடர் செயின் பறிப்பு திருடன் கைது!

25 November 2020, 8:38 pm
Quick Share

கோவை: கோவையில் பல்வேறு திருட்டு வழக்கு உள்ள செயின் திருடன், கவரிங் நகையை பறித்துச் செல்லும் போது பெட்ரோல் டிரை ஆனதால் போலீஸில் சிக்கினார்.

கோவை பிள்ளையார்புரம் அருகே நேற்று முன் தினம் போத்தனூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்த இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பிடிபட்ட இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் மதுரை சேர்ந்த சங்கர் (22) என்பதும், கோவையில் கிடைக்கும் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட அன்று பிள்ளையார்புரம் பகுதியில் வீடு புகுந்து வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து வந்ததும், தப்ப முயன்ற போது பெட்ரோல் இல்லாமல் இரு சக்கர வாகனம் நின்றதால் தள்ளி வந்ததும் தெரியவந்தது. மேலும் சங்கருடன் செல்வபுரம் பகுதியை சேர்ந்த முஷ்ரப் என்ற இளைஞரும் வந்ததாகவும், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போத்தனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0