டிசம்பர் 2ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

29 November 2020, 10:58 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த 21ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிவர் புயலாக மாறி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி தென் தமிழக கடல் பகுதிகளை நெருங்கும்.

இதனால், தமிழகம் மற்றும் கேரளத்தில் அன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத்தாழ்வு மண்டலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று இந்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 52

0

0