தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!!

22 January 2021, 4:53 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சங்கராபுரம், கடவனூரில் தலா 2, மூங்கில்துறைப்பட்டில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 2

0

0