வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை:கணக்கில் வராத 60 ஆயிரம் பறிமுதல்…

Author: kavin kumar
1 October 2021, 3:19 pm
Quick Share

அரியலூர்: கீழப்பழுவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாதகடைசி நாள்‌ என்பதால் போக்குவரத்து அலுவலகத்தில் இடை தரகர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி நடத்துபவர்கள் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை‌ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை
டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் காவலர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கே இருந்த ஆய்வாளர் பெரியசாமி மற்றும் இடை தரகர்கள் மற்றும் ஓட்டுனர்‌ பயின்றுகள் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணம் இல்லாதவர்களை வெளியில் அனுப்பினர். பின்னர் அலுவலகத்தில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடைப்பெற்றது.

Views: - 251

0

0