வாலிபரை அடித்து கொன்ற வழக்கு: செங்குன்றத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

3 November 2020, 3:58 pm
Quick Share

செங்கல்பட்டு: மறைமலை நகர் பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்த வாலிபரை அடித்து கொன்ற வழக்கில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை அன்னை தெரசா தெரு பகுதியை சேர்ந்தவர் தேவபிரகாஷ். இவர் மறைமலை நகர் திருவள்ளுவர் பகுதியில் துரித உணவு(பாஸ்ட் புட்) கடையை நடத்தி வருகிறார்.1 ந் தேதி இரவு (ஞாயிற்று கிழமை) தனது மனைவியை பார்க்க மறைமலை நகர் இரயில்வே காலனி பகுதிக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் மது அருந்தும்போது மல்ரோசபுரம் விஜி என்பவருடன் தகராறு ஏற்பட்டது. தேவபிரகாஷ்க்கும் விஜய்க்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகவும்,

அதனால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது விஜி மற்றும் அவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து தேவ பிரசாத்தை கல்லால் அடித்தும் இரும்பு ராடால் அடித்தும் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மறைமலை நகர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடிவந்த நிலையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த அரவிந்தன், வெங்கடேசன் ,ராஜேஷ் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவே விஜய் என்பவனையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

Views: - 15

0

0