கொல்கத்தா நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதி..

14 September 2020, 10:39 pm
Quick Share

சென்னை: புழல் அருகே கொல்கத்தா நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாதவரம் அடுத்த கதிர்வேடு சாலை சந்திப்பு அருகே சோழவரத்தில் இருந்து மாதவரம் நோக்கி காஞ்சிபுரம் செல்வதற்காக சரக்கு ஏற்றிச் செல்லப்படும் வாகனம் ஈச்சர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்கு முன்னர் அதே திசையில் ஆட்டோ ஒன்றும் சென்று கொண்டிருந்தது , அதனை சதீஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். அதே ஆட்டோவில் பயணித்த பயணி மூலக்கடை சேர்ந்த விக்னேஷ் இருவரும் சென்று கொண்டிருந்தனர் திடீரென்று முன்னால் சென்ற வாகனம் பிரேக் அடித்தால் உடனே இவரும் அடித்துள்ளார்.

இவர் பிரேக் அடித்தவுடன் பின்னால் வந்த ஈச்சர் லாரியும் விபத்தில் சிக்கியது. அதற்கு பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அயனாவரத்தில் சேர்ந்த யோகலட்சுமி, பத்மா இருவர் இந்த விபத்தில் சிக்கினார். அவர்கள் பலத்த காயத்துடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதே திசையில் வந்த சொகுசு கார் கண்ணாடி மற்றும் முன்பக்கமும் பின்பக்கமும் சேதமடைந்தது. இந்த விபத்தில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0