இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து… கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

24 August 2020, 9:08 pm
Quick Share

சென்னை: செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி நேரு நகர் 2வது தெரு சேர்ந்தவர் கௌரிசங்கர். இவர் அலமாதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இவரும் இவருடைய நண்பர் விக்னேஷ் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் வரும் வழியிலேயே கௌரிசங்கர் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் விரைந்து வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Views: - 73

0

0