தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணிகளுக்கான ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்க ; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 5:40 pm
Quick Share

சென்னை : தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஒப்பந்த முறையில் கே.சி.பி. நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மேற்கொண்ட பணிக்கான 22.07.2022 தேதியிட்ட பில் தொகைக்கான ஜிஎஸ்டி வரி சதவீதத்தை மாற்றியமைக்க கோரிய இறுதி உத்தரவை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளின் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளுக்கான ஜிஎஸ்டி சதவீதத்தை 18%மாக உயர்த்தப்பட்டதை, மீண்டும் 12%மாக குறைக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பானக வழக்கின் விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் வக்கீல் சி.பி.ஹேம் குமாரும், எதிர்மனுதாரர்கள் சார்பில் அரசு வக்கீல் டி.கே.சரவணனும் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி அப்துல் குத்தோஸ், “இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் மனுதாரரின் கோரிக்கையை தகுதியின் அடிப்படையில் மற்றும் சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது,” எனக் கூறினார்.

மேலும், உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 8 வாரங்களுக்குள் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 300

0

0