பெரியபாளையம் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

31 August 2020, 7:20 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்கும் நபருக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து
வைத்த மதுவை சட்டவிரோதமாக விற்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த விஜயன் என்பவர் இரண்டு மாதத்திற்கு முன்பு தண்டலம் பகுதியைச் சேர்ந்த கள்ளச்சந்தையில் மது விற்கும் பாஸ்கர் என்ற நபரிடம் 197 மதுபாட்டில்களை இரவு நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து எடுத்து கொடுத்த நிலையில், ஊத்துக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது மது பாட்டில்களுடன் அவர் சிக்கிக் கொண்ட நிலையில்,

இதுகுறித்து அவரிடம் செய்த விசாரணையில் பெரிய பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் விஜயன் தன்னிடம் மது எடுத்து விற்றதாக கூறிய நிலையில் தலைமை காவலர் விஜயனிடம் வெங்கல் ஆய்வாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்தார்.

இந்த நிலையில் இது குறித்து மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், கள்ளச்சந்தையில் மது விற்கும் நபருக்கு 197 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக காவலரே விற்றது தெரிய வந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காவல் நிலையத்தில் பணியில் உள்ள தலைமை காவலர் ஒருவரே கள்ளச்சந்தையில் மது விற்கும் நபருக்கு பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்த மதுவை விற்றது மாவட்ட காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 5

0

0