மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை முதலமைச்சர் நேரில் ஆய்வு

15 January 2021, 6:01 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை முதலமைச்சர், வேளாண்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நெல் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணாடிபட்டு தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள கொடாத்தூர் பகுத்தியில் உள்ள நெல் வயலில் இறங்கி நெல் பாதிப்புகளை முதலமைச்சர் நாராயணசாமி,

வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு சென்ற அவர்கள் நெல் சேதம் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் பாதிப்புக்கான நெல் வயலுக்கான இழப்பீடை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Views: - 0

0

0