வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

5 September 2020, 4:07 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கப்பலோட்டிய தமிழரும், சுதந்திர போராட்ட வீரரூமான வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்த தினம் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரதுறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சட்டபேரவையின் எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் லஷ்மிநாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Views: - 0

0

0