சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

9 August 2020, 7:04 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப் படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 24மணி நேரத்தில் 264 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக பதிப்பு எண்ணிக்கை 5382ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சுகாதாரத்துறை செயலரும் – மாவட்ட ஆட்சியருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Views: - 32

0

0