தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக பெற்றோர் மீது குழந்தைகள் புகார்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்

20 April 2021, 10:49 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் பெற்ற இரு மகன்களையே நரபலி கொடுக்க முயற்சிப்பதாக சிறுவர்கள் புகார் அடிப்படையில் தந்தை , தாய் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு ரங்கம்பாளயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான ராமலிங்கம். இவரது 6 மற்றும் 15 வயது மகன்கள் ஆகிய இருவரும் தனது தாத்தா மற்றும் பாட்டி உதவியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து புகார் அளித்தனர்.அதில் தனது தந்தை ராமலிங்கம் இரண்டாவது திருமணம் கொண்டு தனது தாய் ரஞ்சிதா மற்றும் இரண்டாவது மனைவி இந்துமதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிந்து வந்த்தாகவும் , இதனிடையே தனது தாய் ரஞ்சிதா , தனலட்சுமி என்ற மெண்ணை திருமணம் செய்து கொண்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.சிறுவர்களான எங்களை படிக்க விடாமல் , வீட்டு வேலைகளை செய்ய வைத்தும் , குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் பாத்ரூம் கழுவும் கிருமி நாசினியை குடிக்க வைத்தும் , சாப்பிட்டதுடன் மிளகாய் பொடி கலந்து சாப்பாட கொடுத்தாகவும் , பாத்ரூமில் தூங்க வைத்தும் ,

தங்களின் ஆண் உறுப்பின் மீது மிளகாய் பொடி தூவியும் சித்ரவதை செய்வதாகவும் , குற்றம்சாட்டிய சிறுவர்கள் , தங்கள் தாய் ரஞ்சிதா சக்தியாகவும் , தாயின் தோழி தனலட்சுமி சிவனாகவும் கூறி தங்களை நரபலி கொடுக்கப்போவதாகவும் மிரட்டி வருவதாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் 9 பிரவின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாலுக்கா காவல்துறையினர் சிறுவனின் தந்தை ராமலிங்கம் , தாய் ரஞ்சிதா , ராமலிங்கத்தின் இரண்டாவது மனைவி இந்துமதி , ரஞ்சிதாவின் தோழி தனலட்சுமி மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த தாலுக்கா காவல்துறையினர் அவர்களிடமிருந்து 2 கார்கள் மற்றும் சிவன் சிலை , பூஜைக்குரிய வேர்கள் , வேல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 34

0

0