மதுபானக் கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை: கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

25 September 2020, 5:06 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே மதுபானக் கடையில் மிளகாய் பொடி தூவியும் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து கரையூர் அருகே கவுண்டன் வலசு என்ற கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏழாம் தேதி இரவு சுமார் எட்டு மணி அளவில் டாஸ்மார்க்(மதுபான கடை) ஊழியர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மார்க் ஊழியர்களிடம் மதுபானம் வாங்குவது போல் நடித்து மிளகாய் பொடி தூவி ஊழியர்களிடம் இருந்த 1.43 லட்சம் பணத்தையும் டாஸ்மாக் கடை ஊழியர் கையில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று தப்பினர்.

இதுகுறித்து மூலனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அறிந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின்படி தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த கலைவாணன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கரையூர் அருகே மதுபான கடையில் கொள்ளையடித்த சம்பவம் உறுதியானது. இந்நிலையில் நான்கு நபர்கள் கொள்ளை அடித்ததாகவும், கொள்ளை சம்பவத்தை முடித்தவுடன் தனித்தனியாக 4 பகுதிக்குச் சென்று விட்டதாகவும், நான் மட்டும் இந்த பகுதியில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மதுபான கடையில் கொள்ளையடித்த ஒருவரை மூலனூர் காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் மீதஉள்ள 3 பேருக்கு தனி படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 8

0

0