அதிமுக கட்சியின் இரு பிரிவுக்கு இடையே மோதல்: 4 பேர் காயம். 10 பேர் மீது வழக்கு பதிவு

13 November 2020, 6:27 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் நியமனம் செய்ததில் அதிமுக கட்சியின் இரு பிரிவுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் நேற்று இரவு அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் வழங்கப்பட்டது. இதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதே சமயம் நரிக்குடி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ரவிச்சந்திரன் என்பவரை நியமனம் செய்து அறிவித்து வெளியானதாக கூறப்படுகிறது. அதில் சிறிது நேரத்தில் மாற்றப்பட்டு வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள ரவிச்சந்திரன் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்துள்ளதாகவும்,

அதனை அவரது அலுவலகமான எதிர்க்கோட்டையில் கொண்டாடியபோது, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்ஆர் ராஜவர்மன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கொள்ளவே, பொய் வழக்குப் போடுவதாக கூறி ராமதேவன் பட்டி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் எந்த ஒரு சம்பந்தம் இல்லாத எங்கள் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்தனர கண்டித்து இந்த போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Views: - 13

0

0