ஊரடங்கிலும் சாலைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

16 August 2020, 2:54 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பொது முடக்கம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சாலைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில், இந்த மாதத்தின் முன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒட்டி பொது முடக்கம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தின் முன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் குறிப்பாக திருவாரூர் நன்னிலம் பேரளம் கூத்தாநல்லூர் மன்னார்குடி வலங்கைமான் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. திருவாரூர் நகராட்சி துய்மை பணியாளர்கள் விஜயபுரம் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள மணல்களை அகற்றி சாலைகளில் மண் இல்லாமல் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Views: - 30

0

0