பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

12 November 2020, 9:01 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டியில் கோரோனோ காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டு தீபாவளி பரிசு வழங்கிய தனியார் நிறுவனம் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை செய்தை பாராட்டி கவுரவிக்கும் நோக்கில் காரியாபட்டியில் உள்ள இன்பம் பவுண்டேசன் சார்பில் காரியாபட்டி நிறுவனர் விஜயகுமார் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அதை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக சேலை,வேஷ்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்கள்.

Views: - 15

0

0