துப்புரவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

30 September 2020, 5:42 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்ததகாரர் மூலம் பணி செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்ககாததை கண்டித்து நகராட்சியின் முன்பு துப்புரவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மனோஜ் குமார் என்பவர் துப்புரவு பணி செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணி செய்ய 90க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்து பணி செய்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களுக்கு மாதசம்பளம் ரூபாய் 215 வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் துப்புரவு பணியாளர்களுக்கு ரூபாய் 385 வரை சம்பளம் நிர்ணயம் செய்து அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்புரவு ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வரவில்லை என்றும், துப்புரவு பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்ககாததை கண்டித்து நகராட்சியின் முன்பு துப்புறவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சம்பள வங்கி கணக்குகளின் பாஸ்புக் புத்தகம் வழங்கப்படவிலை என குற்றச்சாட்டியுள்ளனர்.

Views: - 9

0

0