பூர்வீக இடத்தை கூட்டு சதி செய்து போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பு: மாவட்ட காவல்துறை ஆணையரிடம் மனு

18 August 2020, 5:12 pm
Quick Share

கோவை: தங்களின் பூர்வீக இடத்தை கூட்டு சதி செய்து போலி ஆவணங்கள் தயாரித்து, தங்களை தற்போது கொலை மிரட்டல் விடும் நபர்களை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை தடாகம் சாலையில் லாலி ரோடு பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி ஆர்த்தி விக்னேஷ் குமார் சுகன்யா ஆகிய அனைவரும் ஆர் எஸ் புரம் திவான்பகதூர் சாலையில் செயல்பட்டு வருகின்ற பழமுதிர் நிலையத்தின் இடமானது தங்களது பாட்டி பூவாத்தாள் அவர்களுக்கு பாத்தியப்பட்டது எனவும், வாரிசுதாரர்கள் , நாங்கள் இருக்கும் பொழுது, போலியான செட்டில் மெண்ட் பத்திரம் தயாரித்து, அந்த இடத்தில் பழமுதிர் நிலையம் நடத்தி வருவதாகவும்,

இந்த கடையின் உரிமையாளர் நடராஜ் என்பவருக்கு உடந்தையாக சார்பதிவாளர் பெரியசாமி என்பவர் செயல்பட்டு வருவதாகவும், அவர் மூலமாக போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது பலமுதிர் நிலையம் என செயல்பட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், எங்களுடைய பாட்டி பெயரில் உள்ள கடன் தொகை யானது வழக்காக நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது. எனவே பூவாத்தாள் பெயரில் உள்ள சொத்தை விளங்கப்படுத்த ஒருவருக்கும் உரிமை இல்லை எனவும்,

எங்களுடைய சொத்தை மீறி நுழைந்து அபகரித்தது மட்டுமின்றி போலிப் பத்திரங்கள் தயாரித்து கூட்டு சதி செய்து எங்களை சட்டவிரோதமாக வெளியேற்றி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றார். பழமுதிர் நிலையம் நடராஜ் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி பத்திரங்கள் தயாரித்தவர்களின் மீதும் தக்க தண்டனை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.