பாமக வேட்பாளர் செல்வகுமாருக்கு கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு

12 March 2021, 6:49 pm
Quick Share

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாருக்கு அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 ஆம் ஆண்டு கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி கட்சியான பாமக கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் செல்வகுமார் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மல்லவாடி, மங்கலம் சிறுநாத்தூர், தண்டரை, உள்ளிட்ட பல்வறு கிராமங்களில் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் செல்வகுமாருக்கு கூட்டணி கட்சி சார்பாக பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளர் செல்வகுமாரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் செல்வகுமார், திமுக என்ற தீய சக்தியை அழித்து அதிமுக என்ற ஆக்க சக்தி வெல்லும் என தெரிவித்தார்.

Views: - 26

0

0