48 மாதங்களில் வருகிறது உப்பிலி பாளையம் – கோல்டுவின்ஸ் இடையே உயர்மட்ட மேம்பாலம் : டெண்டர் ஒதுக்கீடு
27 August 2020, 1:29 pmகோவை : கோவை மாநகரில் உள்ள உப்பிலி பாளையம் – கோல்டுவின்ஸ் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காந்திபுரம் – கணபதி, நவ இந்தியா – 100 அடி சாலை வரையிலான உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது மக்களின் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அவினாசி சாலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க உப்பிலி பாளையம் – கோல்டு வின்ஸ் வரையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான, டெண்டர் விடப்பட்டது.
அதில், உப்பிலி பாளையம் – கோல்டு வின்ஸ் மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் கே.என்.ஆர் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தேதி குறிப்பிட்ட நாளில் இருந்து 48 மாதங்களுக்குள் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க உள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகன ஓட்டிகள் பயனிக்க முடியும்.
0
0