அதிமுகவை ஃபாலோ செய்யும் பாஜக : அதிமுக கொள்கையை Copy,Paste செய்த வானதி சீனிவாசன்!!

31 October 2020, 10:40 pm
Vanathi - Updatenews360
Quick Share

கோவை : சாதாரண உறுப்பினரும் உயர் பதவியை அடைய முடியும் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியில் மட்டும்தான் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த திருமதி வானதி சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுதான் முதல் முறை..

இந்நிலையில் இன்று கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த வானதி சீனிவாசனுக்கு அக்கட்சியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சார்பாக அவருக்கு ஆளுயர மாலையும், மலர் கிரீடமும் அணிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் அவருக்கு வேல் வழங்கப்பட்டது.

அதன்பிறகு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் இடையே உரையாற்றிய வானதி சீனிவாசன், சாதாரண தொண்டரும் உயர் பதவியை அடையலாம் என்பது பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும். பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு பல சலுகைகளும், முன்னேற்றத்திற்கான பாதையும் அமைத்து தரப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு மகளிர் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது இப்படிப்பட்ட சூழ்நிலையில், வட மாநில கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சி என்று விமர்சிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஹிந்தி பேசத் தெரியாத எனக்கு இந்த பதவி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.பி.,க்களோ எம்.எல்.ஏ.,க்களோ இல்லை என்ற போதும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை மகளிர் அணி தலைவராக அறிவித்திருப்பது தமிழகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கும் நம்பிக்கை.

வரும் 2021 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் சட்டசபைக்குள் செல்வார்கள் கண்டிப்பாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் இதற்கு மகளிரணியினர் 100 சதவீதம் உறுதுணையாக இருப்போம்.”என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழகத்தின் எல்லா கட்சிக்கும் அவர்களுக்கு நிகழ்ச்சியை அறிவிப்பதில் உரிமையிருக்கிறது வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது அந்த யாத்திரையை கண்டு அவர்கள் பயந்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. என்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான பேராசிரியர் கனகசபாபதி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மாநில பொருளாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 23

0

0